குஜராத்தில், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் அகமது படேல், பா.ஜ.க எம்.பி. அபய் கண்பத்ரே பரத்வாஜ் ஆகியோரின் மறைவையடுத்து காலியான அவ்விரு பதவிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.கவை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய முன்வரவில்லை. எனவே, பா.ஜ.க வேட்பாளர்கள் தினேஷ் அனவாடியா, ராம் மொகாரியா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.