பா.ஜ.க உண்ணாவிரத போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீருக்கும் தி.மு.க கவுன்சிலருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ராணுவ வீரர் பிரபுவை தி.மு.க கவுன்சிலர் தனது மகன் மற்றும் தி.மு.க குண்டர்களுடன் சென்று அடித்துக் கொன்றார். அவரது சகோதரர் மற்றும் தந்தையையும் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தினார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு பா.ஜ.க சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் பங்கேற்ற்றார். மாநில துணை தலைவர்கள் கரு. நாகராஜன், வி.பி. துரைசாமி உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ராணுவ வீரர் படுகொலை, பா.ஜ.க நிர்வாகி தடா பெரியசாமி இல்லம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் கண்டிக்கப்பட்டன. உண்ணாவிரதத்தின் நிறைவாக, மாலையில் ஓமந்தூரார் எஸ்டேட் முதல் போர் நினைவுச்சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி செல்லும் பேரணியும் நடைபெற்றது.