ஹிமாச்சல பிரதேசத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், ஹிமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், 8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், ஐந்து புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டும், ‘சக்தி’ திட்டத்தின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் மாநில முன்னேற்றத்திற்கு 12 ஆயிரம் கோடிகள் செலவிடப்படும், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும், முறைகேடுகளை தடுக்க வக்பு வாரிய சொத்துக்கள் சட்டப்படி விசாரிக்கப்படும், நடமாடும் கிளினிக் அதிகரிக்கப்படும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என்பது போன்ற பல வாக்குறுதிகளை பா.ஜ.க அளித்துள்ளது.