கோழி இறைச்சிக் கழிவில் இருந்து பயோடீசல் தயாரிப்பை கண்டுபிடித்ததற்காக கேரள கால்நடை மருத்துவருக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் வயநாட்டில் உள்ள கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ஜான் ஆபிரகாம், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில், கோழி இறைச்சிக் கழிவில் இருந்து பயோடீசல் கண்டுபிடிக்கும் ஆய்வை மேற்கொண்டு வெற்றி பெற்றார். இவர் கண்டுபிடித்த ஒரு லிட்டர் பயோடீசல் 38 கி.மீ. மைலேஜ் கொடுக்கும். இதை தற்போதைய டீசல் விலையில் 40 சதவீதம் அளவுக்கு விற்க முடியும். அதிக மைலேஜ் தருவதோடு, வழக்கமான டீசலை விட காற்று மாசுபாட்டை பாதியாக குறைக்கும் என கூறப்படுகிறது. தற்போது இந்திய காப்புரிமை அலுவலகம் பயோ டீசல் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கி உள்ளது. கடந்த 2015 முதல், இவர் கண்டறிந்த பயோடீசலில்தான் அவர் பணியாற்றும் கல்லூரி வாகனங்கள் இயங்குகின்றன மேலும், தற்போது அவர் பன்றிக் கொழுப்பில் இருந்து பயோடீசல் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.