ஆக்ராவில் உள்ள ஸ்ரீமதி ஜாய் ஹாரிஸ் பெண்கள் கல்லூரியில் முதல்வருக்கு எதிராக பர்தா அணிந்த முஸ்லிம் ஆசிரியைகள் 9 பேர் மற்றும் சுமார் 200 முஸ்லிம் மாணவிகள் கும்பல் ஒன்று சேர்ந்து, அக்கல்லூரி முதல்வர் மம்தா தீட்சித்தை அவர் ஹிந்து என்று கூறி சித்ரவதை செய்துள்ளனர். இதனால் அக்கல்லூரி முதல்வர் அழும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. மம்தா தீட்சித் கல்லூரியில் இருந்து வெளியேற வேண்டும், நிர்வாகம் அவரை நீக்குமாறு முஸ்லிம் ஆசிரியைகள் கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து தான் ஒரு ஹிந்துவாக இருப்பதற்காக துன்புறுத்தப்படுவதாகவும், மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், கல்லூரியில் ரெஹானா காதுன் தலைமையில் பல முஸ்லீம் ஆசிரியர்கள் தனக்கு எதிராக ஒரு குழுவை உருவாக்கி, மதத்தின் அடிப்படையில் தன்னை ஒரு ஹிந்து என்று வேண்டுமென்றே குறிவைப்பதாகவும் கல்லூரி நிர்வாகத்திடம் மம்தா தீட்சித் புகார் அளித்தார். இதுகுறித்து பேசிய கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் லால் பகதூர் மற்றும் இணை இயக்குனர் ஆர்.பி.சர்மாவும், இரு தரப்பையும் இதுகுறித்து கேட்டறிய கூட்டம் நடத்தப்பட்டது. இந்த விஷயத்தை ஆராய ஒரு குழு அமைக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது எந்த சர்ச்சையும் இல்லை. கல்லூரியை ஒழுக்கத்துடன் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான ஒழுக்கமின்மையும் கல்லூரியில் ஏற்றுக்கொள்ளப்படாது. ஒவ்வொருவரும் பள்ளி விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.