முதல்வரானார் பூபேந்திர படேல்

குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக இன்று (டிச.,12) பதவியேற்றார். இவருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பூபேந்திர படேல்  இரண்டாவது முறையாக குஜராத் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.