இஸ்ரோவுடன் பாரதி ஒப்பந்தம்

நிலம், கடல், வான் பகுதிகள் முழுவதும் அதிவேக இணைய இணைப்பை வழங்கும் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை ‘ஒன்வெப்’ என்ற செயல் திட்டம் மூலமாக நிறைவேற்றி வரும் பாரதி ஏர்டெல் நிறுவனம், அதற்காக இஸ்ரோவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. அந்நிறுவனம் இதற்காக வானில் நிலைநிறுத்த உள்ள செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதை இனி இஸ்ரோ செயல்படுத்தும். பாரதி நிறுவனம் இதற்காக மொத்தம் 648 செயற்கைக்கோள்களை உருவாக்கி வருகிறது. அதில் ஏற்கனவே 322 செயற்கைக்கோள்களை சுற்று வட்டப்பாதையில் செலுத்தியுள்ளது. பாரதி ஒன்வெப் அதன் 11வது செயற்கைகோள் ஏவுதலை அக்டோபர் 14ம் தேதி மேலும் 36 செயற்கைக்கோள்களுடன் மேற்கொள்ளும். இந்த ஆண்டு அலாஸ்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட ஆர்க்டிக் பிராந்தியத்திற்கும், 2022ம் ஆண்டின் பிற்பகுதியில் பாரத்த்திலும் இந்த சேவைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.