பாரதமயமாகும் பாரத ராணுவம்

நீண்ட காலமாக நமது பாரத ராணுவம், பிரிட்டிஷ் பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றன. பேன்ட் வாத்தியங்கள், அணிவகுப்பு என பல்வேறு இடங்களில் இந்தத் தன்மை வெளிப்படும். அணிவகுப்பு விழாக்களின் போது இசைக்கப்படும் பல பாடல்கள் பிரிட்டிஷ் பாரம்பரிய பாடல்கள். அதிகாரிகளின் உணவு முறைகளில் பல ஆங்கிலேய கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிக்கும். அதிகாரிகளுக்கான பயிற்சிகளின்போதுகூட, பிரிட்டிஷ், ஜெர்மானிய, சோவியத் ஜெனரல்கள், அலெக்சாண்டர், நெப்போலியன் போன்ற பேரரசர்களின் வியூகங்கள்தான் அதிகமாக பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், தற்போது நமது பண்டைய பாரத அரசர்கள், குறிப்பாக சோழ பேரரசர்களின் கடற்படை வியூகங்கள், மராட்டிய பேரரசர் சிவாஜியின் நுணுக்கங்கள், சானக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம் போன்ற நூல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதை தவிர பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட சில பாராட்டு பட்டங்களை விலக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேஜர் ஜெனரல் பிரேந்தர் தனோவா பேசுகையில், ‘உலகம் முழுவதும் ராணுவங்கள் நவீன போர் முறை மற்றும் சொந்த கலாச்சரங்களை இணைந்தே பின்பற்றி வருகின்றன, அதே நேரத்தில் இந்த மாற்றம் அரசியல் ரீதியான ஒன்றாக இருக்கக் கூடாது’ என கருத்து தெரிவித்தார்.