உலகுக்கு வழிகாட்டும் பாரதம்

2020ம் ஆண்டில் டிக்டாக் உட்பட சுமார் 300 சீன அலைபேசி செயலிகளை தடை செய்வதற்கான பாரதத்தின் முடிவு நம்பமுடியாத அளவிற்கு முக்கியமான முன்னுதாரணமாக உல்க நாடுகளுக்கு அமைத்துள்ளது. இது மற்ற நாடுகளுக்கு ஒரு வழிகாட்டி நட்சத்திரமாக விளங்குகிறது என்று அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) ஆணைனையர் பிரெண்டன் கார் கூறியுள்ளார். எகனாமிக் டைம்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், “டிக்டாக் செயலி ஒரு அதிநவீன கண்காணிப்பு கருவியாக செயல்படுகிறது, இது அதிதீவிரமான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்வைக்கிறது. ஏனெனில் அனைத்து முக்கிய மற்றும் பொது அல்லாத தரவுகளும் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்குச் செல்கின்றன. இது பிளாக்மெயில், உளவு பார்த்தல் போன்ற செயல்பாடுகள் மற்றும் வெளிநாட்டு செல்வாக்கு பிரச்சாரங்கள், கண்காணிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு சீனாவால் பயன்படுத்தப்படலாம். தடை செய்யப்பட்ட நேரத்தில் டிக்டோக் பாரதத்தில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருந்தது.பாரதத்தை அதன் மிகப்பெரிய வெளிநாட்டு சந்தையாகக் கருதியது.இந்த செயலியை தடை செய்வதற்கான முன்மொழிவுகள் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் ஏற்கனவே வெளிவந்துள்ளன.தைவான் சமீபத்தில் பொது சாதனங்களில் இருந்து இதனை தடை செய்துள்ளது.டிக்டாக் அமெரிக்காவில் சுமார் 100 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.அதில் மூன்றில் இரண்டு பங்கு பேர் இளைய தலைமுறையினர்.இந்த செயலியை தடை செய்ய அமெரிக்கா முன்பு முயற்சித்து. எனினும், சமீபத்திய மாதங்களில் அதன் தேசிய பாதுகாப்பு கவலைகள் ஒரு முக்கிய புள்ளியை எட்டியுள்ளன, இது டிக்டாக்கை கட்டுப்படுத்த அல்லது தடை செய்வதற்கான புதிய முயற்சிகளுக்கு வழிவகுத்துள்ளது. டிக்டாக் ஒரு முழுமையான தடையைத் தவிர வேறு எதுவும் வேலை செய்யாது.டிக்டாக்கின் மற்ற தீய செயல்பாடுகளைக் களைவதற்கு பாரதத்தைப் போன்ற ஒரு முழுமையான அணுகுமுறையை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும்” என கூறியுள்ளார். ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் என்பது தகவல்தொடர்பு சட்டம், ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு பொறுப்பான ஒரு சுதந்திரமான அமெரிக்க அரசு நிறுவனமாகும். பிரெண்டன் காரின் கருத்துக்கள் அமெரிக்க அரசால் டிக்டாக்கை முழுவதுமாக தடுக்கும் நடவடிக்கைக்ளுக்கு மத்தியில் வெளிவந்துள்ளது.ஏற்கனவே, பல அமெரிக்க மாகாணங்கள், அரசுக்கு சொந்தமான சாதனங்களில் இதன் பயன்பாட்டை தடை செய்துள்ளன.மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிக்டாக் மீது ஒரு முழுமையான தடையை கோரும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.