பாரதத்தின் தூதரக உறுப்பினர்களுடனான சந்திப்பில் “மோடி அரசின் 8 ஆண்டுகள்: வெளிப்புற ஈடுபாடுகளை மாற்றுதல்” என்ற கருப்பொருளில் உரையாற்றிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், ‘நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அருகில் உள்ள பிராந்திய நாடுகளின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது. முழு பிராந்தியத்தையும் உயர்த்தும் “பெரிய தூக்கும் அலையாக” பாரதம் செயல்படுகிறது. முதலில் அண்டை நாடுகள் என்ற கொள்கையை பின்பற்றுகிறது. மிக மோசமான கொரோனா காலம் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்கள் மிகுந்த காலத்திலும்கூட பாரதம் தனது அண்டை நாடுகளுக்கு உதவ கூடுதலாக முயற்சித்து வருகிறது. இனியும் பாரதம் அதனைத் தொடரும்’ என தெரிவித்தார்.