பாரதத்தில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி 199 கோடிக்கும் அதிகமான (1,99,00,59,536) கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,61,19,579 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. 200 கோடி தடுப்பூசிகள் என்ற சாதனையை படைக்க 9,940,464 என்ற எண்ணிக்கையிலான தடுப்பூசிகளே செலுத்தப்பட வேண்டும். இதன் மூலம், உலகிலேயே அதிக எண்ணிக்கையில், விரைவில், மிகத்தரமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய நாடு என்ற பெருமையை பாரதம் பெறவுள்ளது. 12 முதல் 14 வயதிற்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி 16 மார்ச் 2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, ஏறத்தாழ 3.75 கோடிக்கும் அதிகமான (3,75,56,269) இளம் பருவத்தினருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18 முதல் 59 வயது உடையவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனைக்கு மத்தியில் உள்ள திறமை வாய்ந்த, தேசப்பற்று மிக்க, நேர்மையான ஆட்சி மற்றும் மக்களின் ஒத்துழைப்பு மட்டுமே காரணம் என்றால் அது மிகையல்ல.