பாரதம் பிரகாசமான நாடாக பார்க்கப்படுகிறது

கடந்த கால நிகழ்வுகளிலிருந்து எழுச்சிப்பெற்று உருவெடுத்துள்ள பாரதம், உலக நாடுகளால் தற்போது, பிரகாசமான நாடாக பார்க்கப்படுகிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், “புதுமை கண்டுபிடிப்பு, தரம் மற்றும் திறமை ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. நமது தேசத்தின் வளர்ச்சிக்கு வானமே  எல்லை. பாரதத்துடன் பல்வேறு நாடுகள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள தற்போது ஆர்வம் காட்டுகின்றன. கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகியவை தடையற்ற வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடத்தி வருகின்றன. இது உலகில் பாரதத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை உணர்த்துகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக நமது பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. ஆனால், 9 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடிய ஐந்து நாடுகளில் நமது நாடும் ஒன்றாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக, கற்பனைக்கு எட்டாத மாற்றங்களும். வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. பார்தம் இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாகவும், குறைந்த பணவீக்கம் கொண்ட நாடாகவும், வலுவான அந்நிய செலாவணிக் கையிருப்புக் கொண்ட நாடாகவும் உள்ளது. கடந்த நிதியாண்டில் 776 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. இது பாராட்டத்தக்க சாதனை. ஒரு ட்ரில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதி மற்றும் ஒரு ட்ரில்லியன் டாலர் சேவை ஏற்றுமதி என்ற இலக்கை எட்டும் நோக்கில் பாரதம் செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.