ஐ.நா சபையில் உக்ரைன் ரஷ்ய விவகாரத்தில் பாரதம் தொடர்ந்து நடுநிலை வகிக்கிறது. போர் நிறுத்தப்பட வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில், ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் முதல் முறையாக பாரதம் வாக்களித்துள்ளது. ஆனால், பாரதம் ஏதோ ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்ததாக பெரிதாக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விளக்கியுள்ள பாரத வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “எனது பார்வையில் நாங்கள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. விளாடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றுவதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. அதற்கு மட்டுமே நாங்கள் ஆதரவு அளித்தோம். விளாடிமிர் ஜெலன்ஸ்கி 3வது முறையாக ஐ.நாவில் பேச உள்ளார் என்று நினைக்கிறேன். ஏற்கனவே இருமுறை இதுபோல அவர் உரையாற்றி இருக்கிறார்” என்றார்.