பாரதம் சக்திமிக்க நாடாகும்

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், “தொழில் நுட்பங்களை நோக்கி உலகம் வேகமாக நகர்ந்து கொண்டுள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் இதைப்புரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை, உயர் கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. மாணவர்கள் சமூகம் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களை போட்டி மனப்பான்மையோடு அணுக வேண்டும். திறன் மேம்பாடு மிகவும் அவசியம். பாரதம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலக அளவில் தலைசிறந்த 58 நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் பாரத தேசத்தினர் உள்ளனர். 2026ல் நமது நாட்டில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 65 சதவீதமாக அதிகரிக்கும். 2028ல் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் சீனாவை விட பாரதம் உயரும். 2047ல் பாரதம் பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும்” என கூறினார்.