பாரதம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை

கேரள ஆளுநர் ஆரிப் கான் ஒரு பேட்டியில், ‘பாரதத்துக்கு எதிராக சில நாடுகள் பல காலமாக கருத்துத் தெரிவித்து வருகின்றன. காஷ்மீர் விவகாரம் தொடங்கி பல விஷயங்களில் அவர்கள் பாரதத்துக்கு எதிராக பேசியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் அவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. அது அவர்கள் உரிமை. அதன் மீதெல்லாம் நாம் கவனம் செலுத்த வேண்டுமா? என்பதே கேள்வி. அவர்கள் நம்மை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். ஆனால் அதற்கு அவசியமே இல்லை. பாரதம் இது போன்ற சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் பதிலளிக்க வேண்டியதில்லை. பாரதம் தனது சொந்த பாரம்பரியத்தை காப்பதில் கவனமாக இருக்க வேண்டும். எல்லோரையும் ஏற்றுக்கொள்வதும் மற்றவர்களின் கலாச்சாரத்தை மதிப்பதும் நமது பாரம்பரியம். நாம் யாரையும் வேற்று ஆளாக பார்க்க மாட்டோம். பிரதமர் மோடியும் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி வேண்டும். அதுதான் நம் பாரம்பரியம் என்று கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் அதைத்தான் பலமுறை சொல்லி வருகிறார். நுபுர் சர்மா அவசரத்தில் தொலைக்காட்சியில் ஏதாவது பேசி இருப்பார். விவாத கொதிப்பில் ஏதாவது சொல்லி இருக்கலாம். அது போன்ற விஷயங்களுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் கிடையாது’ என தெரிவித்துள்ளார்.