ஆடு மற்றும் பிற விலங்குகளை பலியாக கொன்று விருந்து சமைத்து உண்ணும் பக்ரீத் பண்டிகையின்போது பாரதத்தில் உள்ள முஸ்லிம் சமூகத்தை பகைத்து கொள்ள வேண்டாம் என சர்வதேச விலங்கு உரிமை அமைப்பின் இந்திய பிரிவான ‘பீட்டா இந்தியா’ அமைப்பு முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது. அது, மதத்தின் பெயரால் விலங்குகளை வெட்டக்கூடாது எனமுஸ்லிம் சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கவில்லை குறைந்தபட்சம் ஈத் பண்டிகைக்காக விலங்குகளை வலியின்றி பலியிடவோ, பொது இடங்களில் பலியிடுவதை தவிர்க்கவோ அல்லது அகிம்சையை பின்பற்றி அசைவம் தவிர்த்து சைவ உணவை உண்ணவோ முஸ்லிம்களிடம் வேண்டுகோள் எதையும் விடுக்கவில்லை. அதற்கு பதிலாக, ‘அனைத்து மதங்களும் இரக்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றன’ என்று பொதுவாக கருத்துத் தெரிவித்து கழன்றுக்கொண்டது. ஆனால் இதே பீட்டா அமைப்பு, ஹிந்துக்களின் பண்டிகைகளின்போது விலங்குகள் பயப்படும் சுற்றுசூழல் மாசு ஏற்படும் எனவே பட்டாசைத் தவிர்ப்போம், ஜல்லிக்கட்டு கூடாது, ஹோலியைக் கொண்டாடும்போது சைவ உணவு எடுத்துக்கொள்ளுங்கள், விலங்குகள் மீது வண்ணங்களை பூச வேண்டாம் என விதவிதமாக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற மாற்றுமத பண்டிகைகள் வந்தால் மட்டும் தனது கண்கள், காதுகள் என அனைத்தையும் மூடிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறது பீட்டா. இதுதான் பீட்டாவின் உண்மை முகமா?