மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது நடைபெறும் 2021 – 2022 காரிஃப் சந்தைப்படுத்தல் பருவத்தில் 2021 நவம்பர் 8 வரை 209.52 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளது. தமிழகம், கேரளா, தெலங்கானா, சண்டிகர், குஜராத், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்திரகாண்ட், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து செய்யப்பட்ட கொள்முதல்கள் மூலம் சுமார் 11.57 லட்சம் விவசாயிகள் ரூ 41,066.80 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் பெற்று பயனடைந்துள்ளனர். நடப்பு காரிஃப் சந்தைப்படுத்தல் பருவத்திலும் விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் முந்தைய ஆண்டுகளைப் போலவே சீராக முன்னேற்றமடைந்து வருகிறது.