நமது பரத அரசு ‘மைத்ரி’ திட்டத்தின் கீழ் சுமார் 70க்கும் மேற்பட்ட பல்வேறு ஏழை நாடுகள், அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கியது.தற்போது பாரதம் கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கியுள்ளபோது, அனைத்து நாடுகளும் போட்டி போட்டு பாரதத்திற்கு உதவ முன்வந்திருப்பதற்கு அதுவே முக்கிய காரணம்.அந்த வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழலில் பாரதத்தில் இருந்து தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்தார்.அவரை அந்த நாடு பாரதத்திற்கு நாடு கடத்த முடிவெடுத்த சூழலில், அவர் அங்கிருந்து தப்பினர்.அவர் கியூபாவிற்கு சென்றிருக்கலாம் என கூறப்பட்ட சூழலில், டொமினிகாவில் கண்டுபிடிக்கப்பட்டார்.அவர் அங்கிருந்து விரைவில் பாரதத்திற்கு அனுப்பப்படுவார் என அந்த நாடு கூறியுள்ளது. இந்த இரு நாடுகளும் இந்த விஷயத்தில் பாரதத்திற்கு உதவ நமது அரசின் வெளியுறவுக் கொள்கையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும் ‘மைத்ரி’ தடுப்பூசி திட்டம்தான் இதற்கான முக்கிய காரணங்களுல் ஒன்றாக உள்ளது.