துவங்கியது தலிபான்களின் ஆட்சி

ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி ஆட்சியமைக்க ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். இந்நிலையில், ஜலாலாபாத் நகரின் சாலைகளில் ஆப்கன் தேசிய கொடியுடன் பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அங்கு வந்த தலிபான்கள் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பத்திரிகையாளர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. ஆப்கானிஸ்தான் விமானப்படையின் பெண் விமானி சஃபியா ஃபிரோசியை தலிபான்கள் கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர். ஹசாராத் இன மக்களின் தலைவராக இருந்த அப்துல் அலி மசாரியை கடந்த 1995ல் தலிபான்கள் தூக்கிலிட்டு கொன்றனர். அவரின் நினைவாக மிகப்பெரிய சிலையை பாமியான் நகரில் மக்கள் நிறுவினர். தற்போது அவரின் சிலையை தலிபான்கள் தகர்த்துவிட்டனர். பெண்கள் பள்ளிக்கு செல்லலாம், அலுவலகங்களுக்கு செல்லலாம் என கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்திய தலிபான்கள் தற்போது சாகர்ஹிந்த் மாவட்ட கவர்னராக இருந்த சலீமா மசாரியை கடத்தியுள்ளனர். தாங்கள் ஆச்சரியமாக சுற்றிப்பார்த்த விளையாடிய பொழுதுபோக்கு பூங்கா, தீம் பார்க்கை மறுநாளே தீயிட்டு கொளுத்திவிட்டனர். இப்படியாக அனைவரும் எதிர்பார்த்தபடியே தலிபான்களின் ஆட்சி ஆப்கனில் துவங்கியுள்ளது.