கடற்கரை கண்காணிப்பு

பாரதத்தின் கடலோரப் பகுதி சுமார் 7,516 கி.மீ  நீளமுடையது. இதனை கண்காணிக்க கப்பல்கள் மட்டும் போதாது. எனவே, கடற்கரையோர கண்காணிப்பு திறனை மேம்படுத்துவது அவசியம். அதன் பொருட்டு ராணூவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓவின் டேராடூன் பிரிவு, புதிய எலக்ட்ரோ ஆப்டிகல் வகை கடலோர மற்றும் துறைமுகம் சார்ந்த கண்காணிப்பு அமைப்பை மேம்படுத்த உள்ளது. டேராடூனில் உள்ள இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ரிசர்ச்& டெவலப்மெண்ட் எஸ்டாப்ளைஷ்மெண்ட் என்ற நிறுவனம் இந்த அமைப்பை மேம்படுத்தும். இந்த அமைப்பில் தெர்மல் இமேஜர்கள், உயர்தர ஆப்டிகல் காமிராக்கள் பொருத்தப்படும். இதன் உதவியுடன் இலக்கை துல்லியமாகக் கண்டறிந்து கண்காணிக்க முடியும். மேலும், அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்ற வகையிலும், இரவு பகலிலும் செயல்படக்கூடிய இந்த அமைப்பு கடற்கரையோரமாக உள்ள முக்கிய இடங்களில் நிறுவப்படும். இந்த அமைப்புகளை கடலோர காவல் படை நிர்வகிக்கும். 25 கி.மீ. தூரத்திற்கு இந்த அமைப்பால் கண்காணிக்க முடியும். மேலும் 5மீ அளவுள்ள சிறிய படகை கூட கண்டறியவல்லது. மேலும் இதனால் ஒரே நேரத்தில் பல இலக்குகளை கண்காணிக்க முடியும்.