நியூசிலாந்து நாட்டில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை முஸ்லீம்களின் புகார்களின் அடிப்படையில் மறுஆய்வு செய்ய தலைமை தணிக்கை அதிகாரிகள் முடிவெடுத்தனர். இதனை அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கடுமையாக எதிர்த்துள்ளார். இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாரதம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் உள்ள பல இடங்களில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இன்றுவரை படத்தை 110 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். 1990களில் காஷ்மீரில் ஹிந்துக்கள் மீதான இன அழிப்புத் தொடர்பான உண்மை நிகழ்வுகளைப் பற்றிய படம் இது. இஸ்லாம் பெயரை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தப்பித்துக்கொள்ள இது வழிவகுக்கும்’ என தெரிவித்துள்ளார்.