பாரதத்தில் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி அதனை திருப்பிக் கட்டாமல் தப்பி ஓடி தற்போது லண்டனில் வாழ்ந்து வரும் விஜய் மல்லையாவை திவாலானவர் என்று லண்டன் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப் போவதாக மல்லையா தெரிவித்தார். ஆனால் அதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரஜைகளை ஒப்படைப்பது தொடர்பான நடைமுறைகளில் தீர்வு ஏட்டப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கை, பாரத ஸ்டேட் வங்கி கூட்டமைப்பில் பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஜேஎம் பைனான்சியல் அசெட் ரிகன்ஸ்ட்ரக் ஷன் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்கள் ஒருங் ணைந்து நடத்தி வருகின்றன. இந்த தீர்ப்பு, வங்கிகள் கூட்டமைப்புக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வங்கிகள் கடனை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.