அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சிறந்த கல்வியாளருமான பாலகுருசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏன் அமல்படுத்த வேண்டும், எங்கெங்கு தவறான புரிதல் உள்ளது, அமலாக்கம் செய்யவில்லை என்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், புதியக் கல்விக் கொள்கையால் விளையும் நன்மைகள், அமல்படுத்தவில்லை எனில் மாணவர்கள் சந்திக்கப்போகும் சிக்கல்கள், அதன் முக்கியத்துவம், தேச வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்த தமிழக வளர்ச்சியின் முக்கியத்துவம், அடுத்தத் தலைமுறையினரின் எதிர்காலம், வேகமான உலக வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்களை தயார் செய்ய வேண்டியதன் அவசியம் என பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.