மே16 முதல் மே 23 வரை விஜயபாரதம் மற்றும் பாலபாரதி இரண்டு அமைப்புகளும் திருவிழாக்கோலம் பூண்டது. இந்த அமைப்புகள் நடத்திய குழந்தைகளுக்கான ஆன்லைன் போட்டிகளில் சுமார் 735 குழந்தைகள் பதிவு செய்து கொண்டனர். அதில், 500 குழந்தைகள் வரை இணையதளம் மூலமாக பங்கேற்றனர். 50 குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்றார்கள். பாடல், சுலோகம், கதை சொல்லுதல், கேள்வி பதில், சித்திரம் தீட்டுதல் என்று பிரமாதப்படுத்திவிட்டார்கள் பெற்றோர்களும் பிள்ளைகளும். இது போன்ற நிகழ்ச்சிகள் தனியாக ஈராண்டுகளாக பாலபாரதி நடத்தி வந்தாலும் இந்த முறை இதில் விஜயபாரதமும் இணைந்து நடத்தியது. விவேகானந்த வித்யாலயா பள்ளிகளும் இணைந்ததால் திருவிழா போல ஆனது. அடுத்தமுறை நடக்கும்போது நீங்களும் உங்களுக்கு தெரிந்த பிள்ளைகளை சேர்த்துவிட்டு அவர்களது தனித்திறமை வெளியாக உதவலாமே? – ஆனந்த் வெங்கட்.