விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரில் முதலியார் பட்டித் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில், கடந்த 100 ஆண்டுகளாக கொதிக்கும் நெய்யில் வெறும் கையில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதுபோல இந்த ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு 86 வயதான முத்தம்மாள் எனும் மூதாட்டி, கோயில் பூசாரிகள் அனைவரும் விறகு அடுப்பில், கொதிக்கும் நெய் கொண்ட வாணலியில், வெல்லம் கலந்த அரிசிமாவினால் செய்யப்பட்ட மாவைக்கொண்டு, கரண்டியை பயன்படுத்தாமல், அப்பத்தை வெறும் கையில் சுட்டெடுத்தனர். இதனை பக்தர்கள் பார்த்து பரவசப்பட்டனர். இதற்காக முத்தம்மாள் வருடம்தோறும் 40 நாட்கள் விரதம் இருந்து கடந்த 50 வருடங்களாக இதனை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.