பஜ்ரங் தளம் போராட்டம்

பாரதத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் முஸ்லிம் வன்முறைகளை வன்மையாகக் கண்டித்தும், சமீபத்தில் நுபுர் ஷர்மா வெளியிட்ட கருத்தை முன்வைத்து நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட திட்டமிட்ட ரீதியிலான வன்முறை சம்பங்களை கண்டித்து, பஜ்ரங் தளம்; வி.எச்.பியின் இளைஞர் பிரிவு சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் சிறுபான்மையினராக மாறிவிட்ட ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பட்டியலிட்டு, அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினர், விஷ்வ ஹிந்து அமைப்பின் மத்திய இணைச் செயலாளர் டாக்டர் சுரேஷ் ஜெயின் உரையாற்றுகையில், ‘ஜிஹாதி அமைப்புகள் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்’ என கூறினார். வி.எச்.பி செயல் தலைவர் வழக்கறிஞர் அலோக் குமார், ‘நபிகள் நாயகத்திற்கு எதிரான கருத்துக்களுக்குப் பிறகு நாடு முழுவதும் நடைபெற்ற பரவலான தீவைப்பு, வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்களை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மற்றும் தப்லிகி ஜமாத் ஆகியவற்றை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். ஜிஹாதி மற்றும் அடிப்படைவாத முஸ்லீம் தலைமை, வெள்ளிக்கிழமை தொழுகையின் போது அல்லது மற்ற சந்தர்ப்பங்களில் சாதாரண முஸ்லிம்களை தவறாக வழிநடத்தி வன்முறை பாதைக்கு தள்ளக்கூடாது’ என பேசினார். பஜ்ரங் தள் தேசிய கன்வீனர் சோஹன் சிங் சோலங்கி, ‘வன்முறை மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் சவாலை பஜ்ரங் தள் எப்போதும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், பஜ்ரங்தள் அமைப்புக்கு அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தெரியும்’ என்று எச்சரித்தார்.