சமூக வலைதளத்தில், இளையபாரதம் என்ற, ‘யுடியூப் சேனல்’ நடத்தி வந்த யூடியூபரான கார்த்திக் கோபிநாத், மர்ம நபர்களால் சூறையாடப்பட்ட சிறுவாச்சூர் கோயில் சுவாமி சிலைகளை புனரமைக்க, ‘மொபைல் செயலி’ வாயிலாக நிதி திரட்டினார். இதுகுறித்து முழுமையாக விசாரிக்காத ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அவசர அவசரமாக அவர், சட்ட விரோதமாக நிதி திரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆவடி குற்றப்பிரிவு காவல்துறையினர் கார்த்திக் கோபிநாத்தை கடந்த மே 30ல் கைது செய்தனர். அவரது வங்கிக்கணக்கும் முடக்கப்பட்டது. இவ்வழக்கில் ஜாமின் கேட்டு கார்த்திக் கோபிநாத் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.