ஹூப்ளி கலவர வழக்கில் ஜாமீன் மறுப்பு

கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளியில் கடந்த 2022 ஏப்ரலில் நடத்தப்பட்ட கலவரத்தின்போது சுமார் 1000 பேர் கொண்ட முஸ்லிம் கும்பலால் காவல் நிலையம் தாக்கப்பட்டது. இதில் காவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் காயமடைந்தனர். 6 போலீஸ் ஜீப்புகள், ஒரு கார், ஒரு காவல்துறை இருசக்கர வாகனம் உள்ளிட்டவை சேதமடைந்தன.இது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 41 பேரின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு, காவல் நிலையம் மீது கல் வீச்சு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்து வந்தது. அவர்களின் ஜாமீன் மனுக்களை ஏற்கனவே என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது. இந்த விவகாரத்தில் 140 பேர் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரனையின்போது, “காவல் நிலையம் முன்பு ஒரு பெரிய கும்பல் இருந்ததையும், கும்பலில் இருந்தவர்கள் காவல் நிலையம், காவல்துறை வாகனங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதையும் வீடியோவில் தெளிவாக தெரிகிறது. சிடி மற்றும் குற்றப்பத்திரிகைப் பொருட்கள் உட்பட பதிவுகளில் உள்ள முழுப் பொருட்களையும் ஆய்வு செய்ததில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. சிசிடிவி காட்சிகள், அழைப்பு விவர பதிவுகள் போன்றவற்றிலிருந்து அவர்களது தொடர்புகளை அறிய முடிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் சமூக மக்களை குற்றத்தீ ஈடுபடுத்துவதற்காக காவல் நிலையம் அருகே கூட்டிச் செல்ல வாட்ஸ்அப் குழுக்களில் செய்திகளை அனுப்பியுள்ளனர். இதுபோன்ற பல காரணங்களால் இந்த குற்றவியல் மேல்முறையீடுகளை விசாரிக்க அவற்றுக்கு எந்த தகுதியும் இல்லாததால் அவை தள்ளுபடி செய்யப்படுகின்றன.” என்று நீதிமன்றம் கூறியது.