கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட்டு கட்சியினர், அதிகாரிகளின் அதீத கட்டுப்பாடுகள், தொழில்துறையினருக்கு தரும் பல்வேறு பிரச்சனைகளால் அம்மாநிலத்தில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன. சமீபத்தில் அங்கிருந்து வெளியேறிய கிட்டெக்ஸ் குழந்தைகள் ஆயத்த ஆடை நிறுவனம் தற்போது தெலுங்கானாவில் அதன் தொழிற்சாலையை ஆரம்பித்து அதில் 2,400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் தெலுங்கானாவில் சுமார் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொழில் உற்பத்தி பெருகும். இதைத்தவிர பல்வேறு நிறுவனங்களும் கேரளாவில் இருந்து வெளியேற திட்டமிட்டு உள்ளன. இதனை அறிந்த தெலுங்கானா அரசு உடனடியாக செயல்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களுக்கு தன் அரசு குழுவினரை நேரடியாக அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 6 பெரிய தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தெலுங்கானா தொழிற்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகம் அந்த நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டுவர இதுவரை எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. தொழில்துறையினர் மத்தியில் இது தமிழக அரசின் மிகப்பெரிய தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழகத்தை ஆளும் தி.மு.கவினரின் கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் மீதான தோழமை பாசமா அல்லது அரசுக்கு இது குறித்து ஏதும் தெரியாதா அல்லது தி.மு.கவிற்கு தமிழக முன்னேற்றத்தில் அக்கறை கிடையாதா என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.