தி.மு.கவின் பின்புலம்

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் தமிழகத்தை ஆளும் தி.மு.க முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, குண்டு வைத்து ஆயுள் தண்டனை பெற்ற பயங்கரவாதிகளை, இந்த ஆட்சியிலேயே விடுவிக்க முடியவில்லை என்றால், பிறகு எந்த ஆட்சியிலும் அவர்களை விடுவிக்க முடியாது. எனவே அவர்களை தி.மு.க அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக ஸ்டாலின் தெரிவித்ததாக அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சில நாட்களுக்கு முன், ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை ரூ. 37 ஆயிரத்தில் இருந்து ரூ. 60 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தி.மு.க அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளும், தி.மு.க யாருக்கெல்லாம் ஆதரவான கட்சி, இவர்களின் பின்புலம் என்ன, தி.மு.க தலைமையிலான அரசு ஏன் எப்போதும் ஹிந்து கோயில் இடிப்பு, ஹிந்துக்கள் அவமதிப்பு என செயல்படுகிறது என்பதையே வெளிச்சம்போட்டு காண்பித்துள்ளது.