ஆயுர்வேத காடு

குஜராத்தின் கட்ச் நகரின் காந்திதாம் பகுதியில் உள்ள தீன்தயாள் துறைமுக அறக்கட்டளை, ரோட்டரி வன அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், 30 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட உள்ள ஆயுர்வேத மரங்களைக் கொண்ட பிரத்யேக ஆயுஷ் வனத்தை திறந்து வைத்து மரக்கன்று ஒன்றையும் நட்டார். அப்போது, பாரதத்தின் பாரம்பரிய மருத்துவ முறைகளின் திறனை உணர்ந்து ஆயுஷ் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு பணிகளை பட்டியலிட்ட அமைச்சர், ‘பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், ஆயுஷ் அமைப்பு உலகளாவிய நிலையை எட்டியுள்ளது. இப்போது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கிய நல்வாழ்வு அமைப்புகளில் ஆயுஷ் அமைப்பும் ஒன்றாக மாறி வருகிறது.’ என தெரிவித்தார்.