கார்த்திகேயன் கணேசனுக்கு விருது

பேராசிரியர் யஷ்வந்த்ராவ் கேல்கர் இளைஞர் விருது – 2021க்கான தேர்வுக் குழு, தமிழகத்தின் விழுப்புரத்தில் வசிக்கும் கார்த்திகேயன் கணேசனின் பெயரை அங்கீகரித்துள்ளது. ஜபல்பூரில் நடைபெறவுள்ள அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பின் 67வது தேசிய மாநாட்டில் அவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

கார்த்திகேயன் கணேசன், ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் பணிபுரியும் போது, ​​பாரதத்தில் 1.6 மில்லியன் மக்கள் அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ளதை அறிந்தார். இதில் 75 சதவீதத்தினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதை மாற்றுவதற்காக கார்த்திகேயன் சிருஷ்டி அறக்கட்டளையை துவங்கினார்.

சிருஷ்டி அறக்கட்டளை மூன்று முன்னோடி திட்டங்களை நடத்துகிறது: சிருஷ்டி கிராமம், சிருஷ்டி சிறப்புப் பள்ளி மற்றும் சிருஷ்டி பண்ணை அகாடமி அத்துடன் பல சமூக ஆதரவு மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களையும் செயல்படுத்துகிறது. சிருஷ்டி கிராம சமூக மாதிரியின் மூலம், அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ளவர்கள், வயது வந்தோருக்கான சுதந்திரமான வாழ்க்கை திறன்கள் மற்றும் வேலை திறன்களை அனுபவபூர்வமாக கற்றுக்கொள்கிறார்கள். சமூகத்தில் சுதந்திரமான வாழ்க்கையை நடத்த இது அவர்களுக்கு உதவுகிறது.