ரேடியோ விஷ்வாஸ் 90.8 என்ற ரேடியோ, மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள விஷ்வாஸ் தியான் பிரபோதினி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படுகிறது. இது கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, 2020 ஜூன் மாதம் சி.எஸ்.ஆர் பண்ட் திட்டத்தின் கீழ், ‘அனைவருக்கும் கல்வி’ என்ற நிகழ்ச்சியை துவக்கி நடத்தியது. இதில், மூன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடங்கள் இலவசமாக நடத்தப்பட்டன. ஜில்லா பரிஷத் மற்றும் நாசிக் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் சென்றடையும் விதத்தில் ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடங்கள் ஒலிபரப்பப்பட்டன. நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து. இதனால், 60,000 மாணவர்கள் பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்காக, ரேடியோ விஷ்வாஸ் 90.8 நிறுவனத்துக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, தேசிய சமுதாய வானொலி விருதுகளின் எட்டாவது பதிப்பில் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.