பிரதமர் பெற்ற பரிசுகள் ஏலம்

பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களை, மின்னணு ஏலத்தில் விடும் நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் நடத்துகிறது. அவ்வகையில், இவ்வருடம் பிரதமர் பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் நேற்று முதல் மின்னணு ஏலத்தில் விடப்படுகின்றன. இந்த நினைவுப் பரிசுகளில் ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் அளித்த ஈட்டி, இறகுப்பந்து, கையெழுத்திட்ட சால்வை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், அயோத்தி ராமர் கோயில், சர்தாம், ஆகியவற்றின் மாதிரிகள், சிற்பங்கள், ஓவியங்கள், அங்கவஸ்திரங்கள் உட்பட 1,300 பொருட்கள் ஏலம் விடப்படும். இந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்கும் நபர்கள், அமைப்புகள் https://pmmementos.gov.in என்ற இணையதளம் மூலம் நேற்று முதல் வரும் அக்டோபர் 7ம் தேதி வரை பங்கேற்க முடியும். இந்த மின்னணு ஏலம் மூலம் கிடைக்கும் பணம், கங்கை நதியை பாதுகாக்கும், புதுப்பிக்கும் ‘நமாமி கங்கே’ திட்டத்துக்கு வழங்கப்படும்.