மங்களூரில் நான்கு நாட்களுக்கு முன்பு, மதரசாவில் படிக்கும் ஒரு முஸ்லிம் சிறுவன், காவி உடை அணிந்த, நெர்றியில் திலகமிட்ட அடையாளம் தெரியாத ஒருசிலர் அவனை தாக்கியதாகவும் சட்டைகலை கிழித்ததாகவும் புகார் அளித்தான். இதன் அடிப்படையில் காவல்துறை விசாரணை செய்தது. தற்போது, சிசிடிவி காட்சிகளின் மூலம், அந்த சிறுவன் தான் தாக்கப்பட்டதை போல காட்ட, பேனாவால் தனது ஆடைகளை தானே கிழித்திருப்பது தெரியவந்துள்ளது.