இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் உள்ள ஒரு திரையரங்கில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் திரையிடலை சீர்குலைக்க ஷகீல் அப்சர் என்ற முஸ்லிம் நபரின் தலைமையிலான தீவிர இஸ்லாமியயவாதிகள் முயன்றனர். ஷகீல் அஃப்சர், காஷ்மீரின் பிரிவினைக்காக வாதிடும் பாரத விரோத செயல்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் வந்திருந்த ஒரு பெரிய பிற்போக்கு கும்பல் தியேட்டருக்குள் புகுந்து சத்தம் போட்டு பார்வையாளர்களை மிரட்டியது. இருப்பினும், பார்வையாளர்கள் இந்த தீவிர மத அடிப்படைவாதிகளுக்கு அடிபணிய மறுத்து, அவர்களை எதிர்த்து கூச்சலிட்டனர். இது தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகளை பின்வாங்க வைத்தது. இறுதியில் அவர்கள் தியேட்டரை விட்டு வெளியேற்றப்பட்டனர். பிரிட்டிஷ் முஸ்லீம் செய்தி இணையதளமான 5பில்லர்ஸில் பதிவேற்றப்பட்ட அவர்கள் நடத்திய தாக்குதலின் 10 நிமிட வீடியோவில், அப்சரும் அவரது தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவும் திரையரங்குக்குள் நுழைந்து செய்த ஆர்பாட்டங்கள், மிரட்டல்களால் படம் இடைநிறுத்தப்பட்டது, ஷகீல் அப்ஸரும் அவரது குழுவினரும் மக்களைத் துன்புறுத்தி திரையரங்குகளில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதைக் காட்டுகிறது. இங்கிலாந்தில் 31 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த நடவடிக்கை அந்நாட்டில் வசிக்கும் பாரத சமூகத்தினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சில சமூக ஊடக பயனர்கள், பிரிட்டிஷ் போர்டு ஆஃப் ஃபிலிம் கிளாசிஃபிகேஷன் (பி.பி.எப்.சி) திரைப்படத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் சில குழுக்களை திருப்திப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். அனைத்து எதிர்ப்புகளையும் மீறி இந்தத் திரைப்படம் பாரதம் மற்றும் வெளிநாடுகளில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்து வருவதுட ரூ. 200 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.