நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கிரிஷ் சந்திரா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, “தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (என்.சி.ஆர்.பி) புள்ளிவிவரத்தின்படி கடந்த 4 ஆண்டுகளில் பட்டியல் சமூகத்தினர் மீதான தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதும் 1,89,945 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன் மீதி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருந்தாலும், இத்தகைய வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்து மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறது” என தெரிவித்தார்.