அக்டோபர் மாதம் துர்கா பூஜையின் போது நமது அண்டை நாடான வங்கதேசத்தில் நடந்த ஹிந்துக்களுக்கு எதிரான படுகொலைகள், கொடுமைகள் உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளானது. ஆனால், அங்கு வாழும் சிறுபான்மை ஹிந்துக்கள் இப்போது அன்றாடம் சிறிய சிறிய வன்முறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் லால்மோனிர்ஹாட் மாவட்டத்தின் டென்டுலியா கிராமத்தில் ஆளும் பங்களாதேஷ் அவாமி லீக் கட்சியின் உள்ளூர் தலைவர் மிஜனூர் ரஹ்மான் மிஜு என்பவர் , 60 பேர் கொண்ட ஒரு வன்முறை கும்பலை ஏவிவிட்டு அங்குள்ள ஒரு ஹிந்து குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறும் மிரட்டியுள்ளார். இதில், தபன் சந்திர ராய், அவரது மனைவி நயன் ராணி ராய் மற்றும் அவரது தாயார் சாந்தி பாலா ஆகியோர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக லால்மோனிர்ஹாட் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.