இஸ்கான் கோயில் மீது தாக்குதல்

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் டாக்காவில் உள்ள இஸ்கான் கோயிலை சுமார் 200 பேர் கொண்ட முஸ்லிம் கும்பல் தாக்கியது. ஹாஜி ஷஃபியுல்லா, முகமது இஸ்ராப் சூபி என்பவர்களின் தலைமையிலான அக்கும்பல், கடந்த மார்ச் 17 அன்று கோயிலை அடித்து உடைத்து, விக்கிரங்களை உடைத்து வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது. ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன. அங்குள்ளவர்களை உயிருடன் புதைத்து விடுவதாகவும் அக்கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டினர். இத்தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்தனர். காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீப காலமாக, வங்க தேசத்தில் ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது என்பது நினைவு கூரத்தக்கது.