ஹிந்து கோயில் மீது தாக்குதல்

பாரதத்தின் அண்டை நாடான வங்க தேசத்தில் உள்ள மோங்லாவில் உள்ள கைன்மாரி என்ற அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை ஒட்டிய மைதானத்தில் முஸ்லிம்களின் மதரசாவை சேர்ந்த சிறுவர்கள் கால்பந்து விளையாடினர். இதனால், கோயிலில் சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதால், அந்த சிறுவர்களை மைதானத்தில் கால்பந்து விளையாட வேண்டாம் என கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து, கோயில் மீது தாக்குதல் நடத்தப்படும், இதற்கான பின்விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என அச்சுறுத்திய மாணவர்கள், அந்திருந்து வெளியேறினர். அன்று இரவில் கோயிலுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள், கோயிலை தாக்கி சேதப்படுத்தினர். கோயிலில் உள்ள அம்மன் சிலை, விநாயகர் சிலை உட்பட கடவுள் சிலைகளையும் சேதப்படுத்தினர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மதரசாவை சேர்ந்த மூன்று முஸ்லிம் சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள  ஹிந்துக்கள் மாதும் அவர்களின் கோயில்கள் மீதும் பல தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, பல ஹிந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.