‘ஹிந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அமையாத, ஆயிரக்கணக்கான கிராமக் கோயில் பூசாரிகளின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோயில்களில் சம்பளம் இல்லா பணியாளர்களுக்கு வழங்குவதை போல, 4,000 ரூபாய், அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்க வேண்டும். தற்போதுள்ள ஊரடங்கு, கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் குடும்பம் நடத்தவே போராடி வருகின்றனர்’ என, கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.