கர்நாடக மாநிலத்தில் அபூர்வா புராணிக் என்ற பிராமணப் பெண், எம்.பி.ஏ படிக்கும் போது இஜாஸ் என்ற முஸ்லிம் நபரை காதலித்தார். இஜாஸ் 2018ல், அபூர்வாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோ பதிவு செய்தார். அதை வைத்து தன்னை திருமணம் செய்துகொள்ள மிரட்டினார். வேறு வழியின்றி பெற்றோரை எதிர்த்துக்கொண்டு திருமணம் செய்துகொண்டார் அபூர்வா. திருமணத்திற்குப் பிறகு, இஜாஸ் அவரை முஸ்லிம்மாக மாற்றினான். அர்ஃபா பானு என பெயரையும் மாற்றினான். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில், இஜாஸின் முதல் திருமணம் மற்றும் மூன்று குழந்தைகளைப் பற்றி அறிந்துகொண்ட அபூர்வா இஜாசை பிரிந்து தனது மகனுடன் பெற்றோரின் வீட்டிற்கு சென்றார்.நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து அபூர்வாவை நடுத்தெருவில் 23 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பித்துவிட்டான் இஜாஸ். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அபூர்வா. அவர் தற்போது விடுத்துள்ள வீடியோ செய்தியில், “முஸ்லீம் ஆணுடன் உறவில் ஈடுபட்டதன் மூலம் நான் செய்த தவறுகளை வேறு எந்த ஹிந்து பெண்ணும் செய்ய வேண்டாம். நம்முடைய மரபுகள் மற்றவற்றிலிருந்து வேறுபட்டது என்பதால் ஹிந்து தர்மத்திற்குள் திருமணம் செய்வதுதான் பாதுகாப்பானது. மற்ற மரபுகளுடன் பழகுவது கடினம். நாம் நமது கலாச்சாரம், பாரம்பரியங்களை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் விரும்பினால் நம் சமூகத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நாம் பாதுகாப்பாக இருப்போம்” என தெரிவித்துள்ளார்.