சுவாமி அவ்தேஷானந்த் வேண்டுகோள்

கும்பமேளாவை அரசியலாக்குவதை நிறுத்துங்கள், நமது மரபுகள் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் களங்கப்படுத்தப்படுகின்றன என ஜூனா அகாராவின் சுவாமி அவ்தேஷானந்த் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ செய்தியில், ‘நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவ கும்பமேளாதான் காரணம் என்று ஒரு கருவித்தொகுதி பிரச்சாரம் செய்து வருகிறது. உத்தரகண்டில் கும்பமேளா நடந்து கொண்டிருந்தபோது, ​​பிற மாநிலங்களில் கொரோனா தாக்கம் ஏற்கனவே அதிகரித்திருந்தன. ஆனால், அப்போது உத்தரகண்டில் கொரோனா தாக்கம் கடுமையாக இல்லை. தேசத்தின் கலாச்சாரம், சடங்குகள், நம்பிக்கை மற்றும் மரபுகள் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் களங்கப்படுத்தப்படுகின்றன. கும்பமேளாவை அரசியலாக்குவது நல்லதல்ல. துறவிகள் சமூகம் இதை கண்டிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க கும்பமேளா முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டது’ என்று கிரி கூறினார். முன்னதாக, ‘கும்பமேளாவை ‘கொரோனா சூப்பர் ஸ்பிரெடர் நிகழ்வு’ என்று கேவலப்படுத்த காங்கிரஸ் ஒரு கருவித்தொகுப்பை (டூல்கிட்) வடிவமைத்தது. உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிவுறுத்தல்களுக்கு எதிராக புதியவகை உருமாறிய கொரோனாவை “இந்திய திரிபு” அல்லது “மோடி திரிபு” என்று அழைக்க காங்கிரஸ் தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது’ என பா.ஜ.க குற்றம் சாட்டி அதற்கான ஆதாரங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.