கர்நாடக காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ சலீம், மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்பியான வி.எஸ் உக்கிரப்பா இருவரும் ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளரின் ஊழல்கள் குறித்து விவாதிக்கும் வீடியோவை பா.ஜ.கவின் அமித் மாளவியா டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில், ‘காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாநிலத்தின் நீர்ப்பாசனத் துறையில் நடந்த ஊழல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. டி.கே. சிவகுமாரின் உதவியாளரே 50 முதல் 100 கோடிவரை ஊழல் செய்தார் என்றால், சிவக்குமார் எவ்வளவு சம்பாதித்திருப்பார்’ என பேசிக்கொண்டனர். மேலும், சிவகுமார் ஒரு குடிகாரர் எனவும் விமர்சித்தனர்.