பாப்புலேஷன் ஆர்மி அமைக்கும் அசாம்

அசாம் சட்டசபையில் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து பேசிய அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, ‘மக்கள் தொகை கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாப்புலேஷன் ஆர்மி என்ற 1000 இளைஞர்கள் கொண்ட ஒரு குழு ஏற்படுத்தப்படும். அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள், பொதுமக்களுக்கு, மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கை, அதன் அத்தியாவசியம், கருத்தடை முறைகள் போன்ற தகவல்களை மக்களுக்கு அளிப்பார்கள். ஆஷா தொழிலாளர்களின் தனிக் குழுவும் இதற்கு ஏற்படுத்தப்படும். அசாமில் சிறுபான்மை முஸ்லிம்களிடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வறுமைக்கு மூல காரணம் மக்கள்தொகை பெருக்கமே. அசாமில் ஹிந்துக்களிடையே மக்கள்தொகை வளர்ச்சி 2001 முதல் 2011 வரை 10 சதவீதமாக இருந்த்து. ஆனால், அது முஸ்லிம்களிடையே 29 சதவீதமாக இருந்தது’ என தெரிவித்தார். மேலும், இதில் ஒத்துழைக்க காங்கிரஸ், ஏ.ஐ.டி.யு.எப் ஆகிய கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்தார்.