குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஹிந்துக்களின் வாக்கு வங்கியைக் கவர பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிவரும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்ஷ்மி தேவியின் உருவப்படங்களை பதிக்க வேண்டும் என கூறினார். இதையடுத்து தற்போது, பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்துள்ளது. மேலும் இது, தொடர்பான விவரத்தை இந்திய சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதனிடையே “அரசியலமைப்பு சட்டப் பிரிவு 44ல், பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆனால், அதை ஏன் நாடு முழுவதும் கொண்டு வர பா.ஜ.க நடவடிக்கை எடுக்கவில்லை? வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக பா.ஜ.க காத்திருக்கிறதா?” என கெஜ்ரிவால் கேட்டுள்ளார். பொது சிவில் சட்டம் செயல்பாட்டுக்கு வருவதை தடுக்க அது, முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கூறி, சில முஸ்லிம் அமைப்புகள், முஸ்லிம் மக்களை மூளைசலவை செய்து வருகின்றன. பொது சிவில் சட்டம் தொடர்பான விவரத்தை இந்திய சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. மேலும், பலதார திருமணம், நிகா ஹலால், நிக்கா மிஸ்யர் உள்ளிட்டவை குறித்த மனுக்களை (சமீனா பேகம் வழக்கு) உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.