ஆயுதமேந்தும் இந்தியர்கள்

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 9 ஆண்டுகள் தொடர்ந்து அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் தனது பதவி காலத்தில் ஊழல், சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இதனால், ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீதான பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கில் அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் என்ற பெயரில் கடைகள் சூறையாடப்படுகின்றன, தீ வைப்பு சம்பவங்களும் நடக்கின்றன. வன்முறைகளால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஜேக்கப் ஜுமா நம் நாட்டை இந்தியர்களுக்கு விற்றுவிட்டார் என டுவிட்டரில் அங்கு ஊழலில் ஈடுபட்ட குப்தா சகோதரர்களின் படம் பகிரப்பட்டது. இதனையடுத்து அங்கு அனைத்து இந்திய வம்சாவளியினர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களின் கடைகள், வீடுகள் குறிவைக்கப்படுகின்றன. இதனால், அங்குள்ள இந்திய வம்சாவளியினர், தங்களை பாதுகாத்துக்கொள்ள. வேறு வழியின்றி ஆயுதங்கள் ஏந்தியுள்ளனர். விரைவில் அங்கு ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இதனால், பதற்றம் விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.