அரேபியர் தயாரிப்பில் அரவானை பாயாசம்?

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் உள்ள சபரிமலை கோயில், அதன் புனிதத்தன்மை பாரம்பரியத்திற்கு உலகப்புகழ் பெற்றது. நான்கு கோடிக்கும் அதிகமானோர் செல்லும் புண்ணிய பூமி அது. ஆனால், அதன் புனிதத்தை சிதைக்கும் வகையில் ஹிந்து விரோத போக்குடன் நடந்துகொள்கிறது அக்கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு.

சபரிமலையில் வழங்கப்படும் பாரம்பரியமான அரவானை பாயசம் பிரசாதம் பக்தர்களால் காலங்காலமாக விரும்பப்படும் ஒன்று. இந்த பிரசாதத்தைப் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருப்பார்கள். இந்த அரவானை பாயசத்தை தயாரித்து அளிக்கும் உரிமையை ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அஜ்மான் & கோ நிறுவனத்தின் துணை நிறுவனமான அல் ஜஹாவுக்கு அளித்துள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு.

ஒரு பாரம்பரியமான ஹிந்து கோயிலுக்கு அதன் முக்கியமான பிரசாதத்தை பாரம்பரிய முறைப்படி தயாரித்து அளிக்க ஹிந்துக்களின் நிறுவனங்கள் ஒன்றுகூட பாரதத்திலேயே இல்லையா? முஸ்லிம் நாடுகளில் அனைத்து பொருட்களும் ஹலால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இது ஹிந்துக்களின் நடைமுறைக்கு சற்றும் பொருந்தாது. அப்படியிருக்க தற்போது அல் ஜஹா என்ற வெளிநாட்டு முஸ்லிம் நிறுவனம் தயாரித்து அளிக்கும் அரவானை பாயாசத்தை எப்படி பிரசாதமாக ஏற்றுக்கொள்ள முடியும்?

சபரிமலையில் பெண்கள் நுழையும் போராட்டம் போன்றே இதுவும் சபரிமலை புனிதத்தை சீர்குலைக்க, கேரளாவை ஆளும் கம்யூனிச அரசும் முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து எடுத்துள்ள அடுத்த நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

அஜ்மான்& கோ நிறுவனம் கடந்த ஜனவரி 2020ல்தான் துவக்கப்பட்டது. இது, அரவானை பாயச தயாரிப்பில் பெருமளவில் ஊழல் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு இதுபோன்ற டெண்டர் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதேபோன்ற டெண்டர் கடந்த 2007ல் எலைட் இந்தியா எக்ஸ்போர்ட் என்ற முஸ்லிம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

பாரத தேசத்தில் உள்ள அனைத்து ஹிந்து கோயில்களும், மடங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதே இது போன்ற ஹிந்து விரோத நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு.

மதிமுகன்