முஸ்லிம் மதத்தை நிறுவிய முஹம்மதுவின் வாழ்க்கை குறித்து பா.ஜ.க முன்னாள் தலைவர் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்து முஸ்லிம் இடதுசாரிகளால் பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டது, இது முகமதுவை அவமதிக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், முகமது நபி ஆயிஷா குறித்த இந்த சர்ச்சையை குறித்து சௌதி முஸ்லிம் அறிஞர் மௌலானா அஸீம் அல் ஹக்கீமிடம் டுவிட்டர் பயனர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த மௌலானா அசிம் அல் ஹக்கீம், “இது நூற்றுக்கு நூறு உண்மை” என்று பதில் அளித்தார். மேலும், அமண்டா ஃபிகெரா என்ற பத்திரிகையாளர் அல் ஹக்கீமிடம் “ஆயிஷா நபியுடன் வந்தபோது அவருகு 9 வயது என்பது உண்மையா? நான் இதுகுறித்து படித்தபோது அவருக்கு வயது 17 வயது இருக்கும் என்று கூறப்பட்டதே? என சந்தேகம் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மௌலானா அல்-ஹக்கீம், “அதெல்லாம் பொய்! ஆயிஷா தானே எங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) ஒன்பது வயது என்று கூறினார்! இது சஹி புகாரி மற்றும் பிற ஹதீஸ்களிலும் உள்ளது” என தெரிவித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்தார். முன்னதாக, ஜமாத் உலமா இ ஹிந்த் தலைவர் சுஹைப் காஸ்மி, நுபுர் ஷர்மாவைச் சுற்றி முஸ்லிம் மதவெறியர்கள் கட்டியெழுப்பிய முழு கதையையும் அம்பலப்படுத்தினார். மேலும் நுபுர் ஷர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அசாதுதீன் ஒவைசி, முகமது மதானிக்கு உள்ளிட்டோருக்கு எதிராக ஃபத்வா (தடை) வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.