பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மார்ச் 2023 வரை அடல் இன்னோவேஷன் மிஷன் (ஏ.ஐ.எம்) தொடர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. புதுமை கலாச்சாரம் மற்றும் தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் ஏ.ஐ.எம் செயல்படும். 10,000 அடல் டிங்கரிங் லேப்களை நிறுவுதல், 101 அடல் இன்குபேஷன் சென்டர்களை நிறுவுதல், 50 அடல் சமூக கண்டுபிடிப்பு மையங்களை நிறுவுதல் மற்றும் அடல் நியூ இந்தியா சவால்கள் மூலம் 200 ஸ்டார்ட்அப்களை ஆதரிப்பது ஆகியவை ஏ.ஐ.எம்மால் அடையப்படும் இலக்குகளில் அடங்கும். கடந்த ஆண்டுகளில், நாடு முழுவதும் புதுமை செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ஒரு நிறுவன பொறிமுறையை வழங்க ஏ.ஐ.எம் வேலை செய்துள்ளது. அதன் திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களின் புதுமை செயல்படுகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளன. ஏ.ஐ.எம் ஆதரவு ஸ்டார்ட்அப்கள் அரசு மற்றும் தனியார் பங்கு முதலீட்டாளர்களிடமிருந்து 2,000 கோடிகளுக்கு மேல் திரட்டி பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. தேசிய நலன் சார்ந்த தலைப்புகளில் பல புதுமை சவால்களையும் ஏ.ஐ.எம் செயல்படுத்தியுள்ளது.